
செராஸ், மார்ச்-16-கோலாலாம்பூர், செராஸில் ‘Ayam Gepuk’ கோழி உணவைத் வாங்கித் தருமாறு கர்ப்பிணி மனைவி ஆசையாய் கேட்க, கடைசியில் அது குடும்ப வன்முறையாக மாறிப்போனது.
மார்ச் 11ஆம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில், 33 வயது இல்லத்தரசி, தனது கணவனிடம் ‘Ayam Gepuk’ வாங்கித் தரச் சொன்னார்.
ஆனால், கணவன் கோபமடைந்து, ‘நீயே சமைத்து சாப்பிடு’ என்று திட்டியதோடு, அவரைத் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மனைவியை மூச்சுத்திணறச் செய்து, கன்னத்தில் அறைந்ததோடு, கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இப்புகார், குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதை செராஸ் போலீஸ் உறுதிப்படுத்தியது.
வலப்பக்க கழுத்தில் காயமடைந்த அம்மாது செராஸில் உள்ள சான்சலர் துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.
மனைவிமார்களின் கர்ப்பக் காலங்களில் அவர்கள் வாய்க்கு ருசியாக கேட்கும் உணவுகளை கணவன்மார்கள் பெரும் சந்தோஷத்துடன் வாங்கிக் கொடுப்பார்கள் என்றுதான் கேள்விப்பட்டுள்ளோம்.
ஆனால், இங்கு அடிதடியில் முடிந்த சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



