மும்பை , ஜன 16 – வீட்டில் திருடுவதற்காக உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத ஆடவனால் கத்தியால் குத்தப்பட்டதால் காயம் அடைந்த பிரபல இந்தி நடிகர் சைப் அலி கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பை Bandra West பகுதியிலுள்ள சைப் அலியின் அடுக்கு மாடி வீட்டில் 11 ஆவது மாடியில் இன்று காலையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் தாக்குதல் நடத்திய ஆடவன் தப்பியோடிவிட்டதாக Bandra போலீஸ் அதிகாரி தெரிவித்தார். தற்போது அறுவை சிகிச்சை பகுதியில் இருப்பதாக கூறப்பட்டது.
அதிகாலை மணி 2 மற்றும் 2.30 மணிக்கிடையே தனது வீட்டில் சத்தம் கேட்டதை உணர்ந்து தூக்கத்திலிருந்து Saif Ali Khan விழித்தபோது அவரை அந்த ஆடவன் கத்தியால் குத்தியுள்ளான். அந்த சம்பவத்தின்போது அவரது குடும்பத்திலுள்ள இதர உறுப்பினர்களும் வீட்டில் இருந்தனர். Bandra விலுள்ள Lilavati மருத்துவமனைக்கு Saif Ali Khanனை அவனை மகனும் மற்றொரு நபரும் அதிகாலை மூன்று மணிக்கு கொண்டுச் சென்றனர். கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டதால் அவரது உடலில் ஆறு வெட்டுக் காயங்கள் இருந்ததாக அந்த மருத்துவமனையின் டாக்டர் Niraj Uttami தெரிவித்துள்ளார். இன்று காலை மணி 9 வரை அவருக்கு நரம்பியல் நிபுணர் டாக்டர் Nitin Dange அறுவை சிகிச்சை செய்து வந்ததாகவும் கூறப்பட்டது. முதுகெலும்பு வடம் மற்றும் இடது மணிக்கட்டுப் பகுதியில் அவருக்கு இரண்டு காயங்கள் ஆழமாக உள்ளது.