Latestமலேசியா

ஆட்டிசம் குழந்தையை பராமரிப்பு மையத்தின் ஸ்டோரில் அடைத்து வைப்பதா?

கோலாலம்பூர், ஜன 21 – ஷா அலாமிலுள்ள குழந்தை பராமரிப்பு நிலையத்தில் பொருட்களை வைக்கும் ஸ்டோர்ரூம் எனப்படும் கிடங்கில் ஆட்டிசம் குழந்தை ஒன்று அடைத்து வைத்திருக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டிசம் குழந்தைகளை பாலர் பள்ளி மற்றும் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்பிவைக்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் பாதுகாப்பான இடத்தில் இருப்பார்கள், அதனை நடத்திவருவோர் நல்ல முறையில் கவனித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடுதான் அனுப்பிவைக்கின்றனர்.

ஆனால் அந்த நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் ஏற்படும் சம்பவங்கள் பெற்றோர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன.

ஷா அலாமில் குழந்தை பராமரிப்பு நிலையத்தில் ஸ்டோர் ரூமில் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தை அடைத்து வைக்கப்பட்ட காணொளியை பிரபல செல்வாக்கு மிக்க Caprice அல்லது Ariz Ramli Instagramமில் Munafik Hunter மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்.

44 வினாடிகளைக் கொண்ட அந்த காணொளியை சம்பந்தப்பட்ட பராமரிப்பு மையத்தில் பயிற்சி பெறுவதற்காக இணைந்த இரண்டாவது நாளிலேயே அந்த குழந்தைக்கு எதிரான கொடுமை குறித்து தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாத அதன் பயிற்சியாளரும் பதிவேற்றம் செய்து தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆட்டிசம் குழந்தையின் உடலில் துணி எதுவுமின்றி ஸ்டோர் அறையில் எப்படி தனித்து வைக்க முடியும் என Caprice கேள்வி எழுப்பியுள்ளார்.

போலீஸ் , பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பெண்கள், குடும்பம் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் மாரா தலைவர் டத்தோ டாக்டர் Asyraf Wajdi Dusuki ஆகியோருக்கும் Caprice tag செய்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!