
ஜோகூர் பாரு, நவம்பர் 19 – ஆன்லைனில் வேலைவாய்ப்பைத் தேடி தருவதாக கூறி மியன்மார் நாட்டவர்களை தொடர்ந்து ஏமாற்றி வந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட 5 மியன்மார் பெண்களுக்கு இன்று நீதிமன்றம் தலா 5,000 ரிங்கிட் அபராதத்தை விதித்துள்ளது.
நீதிபதியின் முன்னிலையில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டபோது அந்த ஐவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்ட அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஆறு மாதங்கள் சிறையும், அபராதமும் அல்லது இரண்டும் வழங்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குற்றவாளிகள் விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஒவ்வொருவரும் ஐந்து மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆனால் அந்த ஐவரும் விதிக்கப்பட்ட அபராதத்தை முழுமையாகச் செலுத்தி விட்டனர்.



