
காபூல், செப்டம்பர்-2 – ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட பெரும் நில நடுக்கமும் அதிர்வுகளும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன.
இதுவரை 812 பேர் உயிரிழந்துள்ள வேளை 2,817 பேர் காயமடைந்துள்ளதாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரிக்டர் கருவியில் 6-ராக பதிவாகிய நில நடுக்கத்தால் தலைநகர் காபூல் முதல் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரை கட்டடங்கள் குலுங்கின.
சுமார் 12 இலட்சம் பேர் பலத்த அதிர்வுகளை உணர்ந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியது.
மிகவும் பாதிக்கப்பட்ட குனார் மாநிலத்தில் மட்டும் 800 பேர் உயிரிழந்து 2,500 பேர் காயமடைந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பலர் அண்மையில் ஈரான் மற்றும் பாகிஸ்தானிலிருந்து திரும்பிய அகதிகள் ஆவர்.
களிமண்-சிறு வீடுகள் இடிந்து பல கிராமங்கள் அழிந்துள்ளன நிலையில், ஐ.நா. மற்றும் தாலிபான் அரசு இணைந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
ஆனால் சரிந்து விழுந்த கட்டடங்கள் மற்றும் பிளவுற்ற சாலைகளாலும், பலவீனமான தொலைத்தொடர்பு வசதி காரணமாகவும் தொலைதூர கிராமங்கள் அணுக முடியாத நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்திய உள்ளிட்ட உலக நாடுகள் உடனடி உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளன.