
கோலாலம்பூர், மார்ச்-14 -பேராக், ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான ம.இ.காவின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பிறகு தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் அதனை அறிவித்தார்.
இந்தியர்களின் வாக்குகளை தேசிய முன்னணிக்கு கவர்ந்திழுக்க சரவணன் தலைமையில் ம.இ.கா முழு மூச்சாக வேலை செய்யும்.
இந்தியர்களின் பேராதரவோடு தேசிய முன்னணி அத்தொகுதியை தக்க வைத்துக் கொள்ளுமென்றும் தான் ஸ்ரீ விக்கினேஸ்வரன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஆயர் கூனிங் இடைத்தேர்தல் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைப்பெறவிருக்கிறது.