Latestமலேசியா

ஆரம்பப் பள்ளி மாணவர்களின் கல்விப் பயணத்தைச் சித்தரிக்கும் பள்ளிக்கூடம் நாடகத்தை ஆஸ்ட்ரோ, ஒளிபரப்புச் செய்கிறது

கோலாலம்பூர், நவம்பர் 22 – நவம்பர் 18ஆம் திகதி இரவு 9.30 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் பள்ளிக்கூடம் எனும் உள்ளூர் தமிழ் குடும்ப நாடகத் தொடரை அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் கண்டு மகிழலாம்.

முக்கியக் கதாப்பாத்திரங்களில் குழந்தைகள் நடிக்கும் தமிழ்ப் பள்ளிச் சார்ந்த முதல் உள்ளூர் தமிழ் தொடராக, இயக்குநர் தினேஷ் சாரதி கிருஷ்ணன் கைவண்ணத்தில் இத்தொடர் மலர்ந்துள்ளது.

ஆரம்பப் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் மனநலச் சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு உருவான இந்தத் தொடர், மொழிச் சிக்கல்கள் மற்றும் பகடிவதையை எதிர்க்கொள்ளப் போராடும் யமுனா எனும் 10 வயதுச் சிறுமியின் பயணத்தைச் சித்தரிக்கிறது.

மாணவர்களின் தமிழ் மொழித் திறனை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் முத்தமிழ் விழா என்ற போட்டியில் பங்கேற்க யமுனாவைத் தேர்ந்தெடுக்கும்போது, அவளுடையப் பங்கேற்புக் குறித்துப் பெற்றோரின் மாறுபட்டக் கருத்துக்கள் உட்படப் பல கடினமானச் சாவல்களை எதிர்கொள்கிறாள்.

இந்நிலையில், யமுனா இந்தச் சவால்களை எவ்வாறு கையாளுகிறாள் என்பதையும், இறுதியில் இந்தத் தடைகளைக் கடந்து எவ்வாறு வெற்றிப் பெறுகிறாள் என்ற அவளதுப் பயணத்தையும் இந்தத் தொடர் ஆராய்கிறது.

பவித்திரன் சுகுந்தன், நவோமிகா அவிக்னா கவிதரன், வனேசா குரூஸ், சசி தரன், அருணா ராஜ், சங்கபாலன் மற்றும் குபேன் மகாதேவன் உள்ளிட்டப் பிரபல மற்றும் புதிய உள்ளூர் கலைஞர்களும் இந்தத் தொடரில் நடித்துள்ளனர்.

பள்ளிக்கூடம் தொடரின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு, ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டு மகிழலாம்.

மேல் விபரங்களுக்கு astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!