
கோலாலம்பூர், மார்ச்-9- ஆர்.டி.எம் வானொலி மற்றும் தொலைக்காட்சி முன்னாள் தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்.எம். சுப்ரமணியம் இன்று காலமானார்.அவருக்கு வயது 83.
வயோதிகம் காரணமாக உடல் நலிவுற்று நேற்று முன்தினம் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவரின் உயிர் இன்று அதிகாலை 2 மணிக்குப் பிரிந்தது.
சுப்ரமணியத்தின் நெருங்கிய உறவினர் அதனை உறுதிப்படுத்தினார்.
கெடா, புக்கிட் ஜூனுவைச் சேர்ந்த சுப்ரமணியம், 1966-ஆம் ஆண்டு federal house-சில் இயங்கிய வானொலி இந்தியப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார் .
பின்பு மலாக்கா வட்டார ஒலிபரப்புக்கு மாற்றப் பட்டு, அங்கு மாதம் ஒரு நாடகம், கலப்படம் தயாரித்து அனுப்பும் பொறுப்பை வகித்து வந்தார் எம் சுப்ரமணியம்.
அதோடு உள்ளூர் வட்டார ஒலிப்பரப்பு நிகழ்ச்சிகளை தயாரிக்க வேண்டிய கடமையும் அவருடையது. அதில் உள்ளூர் கலைஞர்களின் பாடல்கள், வாத்திய இசை, இசைத்தட்டு நிகழ்ச்சிகள், வாழ்த்து நேயர் விருப்பம், நேர்காணல், வட்டாரச் செய்தி தொகுப்புகளும் அதில் அடங்கும்.
அன்று மலாக்கா வட்டார பாடகர்கள் மற்றும் மேடை நடிகர்களை அடையாளம் கண்டு பல கலைஞர்களை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.
1975-ஆம் ஆண்டு அங்காசபுரிக்கு பணி மாற்றலாகி வந்தப்போது படைப்பு பிரிவில் அறிவிப்பும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராகவும் பொறுப்பேற்றார் சுப்ரமணியம்.
1997-ஆம் ஆண்டு ஓய்வு பெறும் முன் நாடகப் பிரிவில் இருந்தார்
அவ்வேளையிலும் தரமாக நாடகங்களையும் கலைஞர்களையும் உருவாக்கினார் என்றால் மிகையில்லை.
அன்னாரின் உடல் எண் 28 Jalan Dutamas Seroja 4, Taman Segambut SPPK, 51200 Kuala Lumpur எனும் முகவரியிலிருந்து நாளை நண்பகல் 12 மணிக்குள் எடுத்துச் செல்லப்பட்டு செராஸ் மின்சுடலையில் தகனம் செய்யப்படும்