
தங்காக், டிசம்பர்-9 – பொழுதுபோக்கிற்காக தனியே சென்ற போது ஜோகூர், மூவார் ஆற்றில் MPV வாகனம் ஆற்றில் பாய்ந்ததில், அதன் ஓட்டுநரான பெண் நீரில் மூழ்கி மரணமடைந்தார்.
விழுந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவுக்கு அந்த SUV இரக Nissan Grand Livina வாகனம் அடித்துச் செல்லப்பட்டது.
சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு – மீட்புப் படையினர் வாகனத்தையும் அதிலிருந்த 20 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணின் சடலத்தையும் மீட்டனர்.
மேல் விசாரணைக்காக உடல் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது.



