
கோலாலம்பூர், ஆக 26 – ஆஸ்திரேலியா சிட்னியில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 மற்றும் 7 ஆம்தேதிகளில் நடைபெறவிருக்கும் 12 வது குளோபல் வர்த்தக மாநாட்டில் பங்கேற்கும்படி மலேசிய இந்திய வர்த்தக சங்கத்திற்கு உலக வர்த்தக சங்கத் தலைவர் செல்வகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக அரசு மற்றும் நியூ சவுத் வேல்ஸ் (NSW) இரு மாநில அரசாங்கங்களின் ஒத்துழைப்போடு நடைபெறும் இந்நிகழ்விற்கு பல்வேறு நாடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட வர்த்தக பேராளர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக வணக்கம் மலேசியாவுக்கு வழங்கிய நேர்ககாணலில் செல்வக்குமார் தெரிவித்தார்.
இதனிடையே இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களும் இலவசமாக பங்கேற்கலாம். வர்த்தகர்கள் தங்களது உற்பத்தி பொருட்கள் குறித்து காட்சி அரங்கம் அமைப்பதாக இருந்தால் திரையில் காணும் எண்கள் அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்புக் கொள்ளலாம்.
Selvakumar – +60166167708
gotoorganisation@gmail.com