குவாலா திரங்கானு, செப்டம்பர்-27 – இல்லாத ஒரு பகுதி நேர வேலையை இருப்பதாக நம்பி 291,200 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார் குவாலா திரங்கானுவைச் சேர்ந்த ஒரு மூதாட்டி.
கடந்த ஆகஸ்ட் மாதம் முகநூல் வாயிலாக அறிமுகமான நண்பர், பகுதி நேரமாக பணம் சம்பாதிக்கலாமென, வியாபாரியான 71 வயது அம்மூதாட்டிக்கு ஆசை காட்டியுள்ளார்.
இணையம் வாயிலாக பொருட்களை விற்க சொந்த முதலீட்டைப் போட்டால், ஒரே மாதத்தில் போட்டப் பணத்தையும் 15% கமிஷன் தொகையையும் பெற்று விடலாமென அவர் நம்ப வைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, சேமிப்புப் பணம் மற்றும் வியாபாரத்தில் கிடைத்த வருமானம் என மொத்தம் 291,200 ரிங்கிட்டை, கொடுக்கப்பட்ட 4 வங்கிக் கணக்குகளில் அவர் போட்டுள்ளார்.
ஆனால் சொல்லியபடி முதலீடும் வரவில்லை, கமிஷனும் கிடைக்கவில்லை.
தொடர்ந்து பணம் கட்டுமாறு வற்புறுத்தப்பட்ட போதே, தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து அவர் போலீசில் புகார் செய்தார்.