
செத்தியூ, டிசம்பர் – 19, திரங்கானு, செத்தியூவில் கால்வாய்க்குள் விழுந்த 220 கிலோ கிராம் எடையிலான தாபீர் எனப்படும் தும்பிப்பன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
கம்போங் ஜெலாபாங்கில் நேற்று காலை 8 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
வழித் தவறி வந்து கால்வாய்க்குள் விழுந்த அந்த ஆண் தாபீர் செய்வதறியாது நின்றிருந்ததைக் கண்டு, கிராம மக்கள் PERHILITAN எனப்படும் வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடம் விரைந்த PERHILITAN அதிகாரிகள், துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி அதனைப் பிடித்தனர்.
கூண்டில் போடப்பட்ட தாபீர் பின்னர் அதன் அசல் வாழ்விடத்தில் விடப்பட்டதாக திரங்கானு PERHILITAN இயக்குநர் Loo Kean Seong சொன்னார்.