
ஜோர்ஜ்டவுன், ஜனவரி-3 – பினாங்கில் இணைய சூதாட்ட முதலீட்டு மோசடியில் சிக்கிய ரியல் எஸ்டேட் சொத்துடைமை முகவர் ஒருவர், 750,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையை பறிகொடுத்துள்ளார்.
64 வயது அம்மாதுவை, வாட்சப் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர், அதிக லாபம் தரும் இணைய சூதாட்ட முதலீட்டு திட்டம் இருப்பதாக நம்ப வைத்துள்ளார்.
ஆரம்பத்தில் சிறிய தொகை லாபமாக கிடைத்ததால், அவர் மேலும் முதலீடு செய்துள்ளார்.
பின்னர், 8 வங்கி கணக்குகளுக்கு 20 முறை பணத்தை மாற்றி, மொத்தமாக சுமார் 759, 950 ரிங்கிட்டை இழந்துள்ளார்.
இலாபத்தை எடுக்க கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என கேட்டபோதே, தாம் மோசடியில் சிக்கியுள்ளதை அவர் உணர்ந்தார்.
இச்சம்பவம் மோசடிகளுக்கான குற்றப் பிரிவான 420-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



