Latestஉலகம்

இத்தாலியில் 400,000 கிட்கெட் சாக்லேட் பாக்கெட்டுகளுடன் லோரி திருடப்பட்டது

பெருஜியா, மார்ச் 30-பல ஐரோப்பிய நாடுகளுக்கு சரக்குகளை விநியோகிக்கச் சென்றுகொண்டிருந்த ஒரு லோரியுடன் , 4 லட்சத்திற்கும் மேற்பட்ட கிட்கேட் சாக்லேட் பாக்கெட்டுகளும் திருடப்பட்டதாக நெஸ்லே கிட்கெட் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது, சுமார் 12 டன் எடையுள்ள சாக்லேட் பூசப்பட்ட வேஃபர் தின்பண்டங்களை ஏற்றிச் சென்ற ஒரு லோரி , கடந்த வாரம் இத்தாலியின் பெரூஜியாவில் உள்ள தங்கள் நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து புறப்பட்டதாகக் அந்த பிராண்டின் உரிமையாளரான நெஸ்லே நிறுவனம் தெரிவித்தது.

அந்த சரக்கு ஐரோப்பா முழுவதும் விநியோகிக்கப்பட்டு, போலந்தில் சென்றடையவிருந்தது.

ஆனால், திருடர்களால் அந்த லோரி கடத்தப்பட்டதால், அது செல்ல வேண்டிய இடத்தை சென்றடையவில்லை.

அதிகாரிகள் மற்றும் விநியோகிப்பார்களுடன் இணைந்து இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.

குற்றவாளிகளின் வழக்கத்திற்கு மாறான ரசனை பாராட்டக்கூடியதாக இருந்தாலும் , சரக்குத் திருட்டு என்பது அனைத்து வகையான வணிகங்களுக்கும் அதிகரித்து வரும் ஒரு பிரச்னை என்பதே உண்மையாகும்.

அந்த லோரியும் அதிலிருந்து சாக்லெட் பொட்டலங்களும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், அந்த வாகனம் எங்கு இடைமறிக்கப்பட்டது என்பதும் தெரியவில்லை என கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!