
இத்தாலி, ஜனவரி 6 – இத்தாலியின் மத்திய பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில், பணம் எடுத்துச் சென்ற கவசமிட்ட வாகனம் ஒன்று கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் 400,000-திற்கும் அதிகமான இத்தாலி தொகை அதாவது 1.9 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேலான பணம் திருடப்பட்டுள்ளது.
போலீசார் கொடுத்த தகவலின்படி, கொள்ளையர்கள் பல வாகனங்களை வைத்து சாலையை மறித்து, புகை குண்டுகள் மற்றும் வெடிபொருட்களை பயன்படுத்தி வேனை திறந்துள்ளனர். கொள்ளையர்கள் பணத்தை திருடிவிட்டு அதிவேக வாகனங்களில் தப்பிச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த சம்பவத்தில் கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. புகையை சுவாசித்ததால் வாகனத்தில் இருந்த இரண்டு பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் தற்போது சந்தேகநபர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



