
செப்பாங், அக்டோபர்-14,
வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சான KPKT, இவ்வாண்டு நாடு முழுவதும் 50 இந்தியக் கிராமங்களில் 87 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு RM15 மில்லியன் ஒதுக்கியுள்ளது.
சிலாங்கூர், செப்பாங்கில் நடைபெற்ற Sentuhan Kasih MADANI Deepavali 2025 நிகழ்வில் அமைச்சர் ங்ஙா கோர் மிங் அதனைத் தெரிவித்தார்.
இந்த ஒதுக்கீட்டில், சாலைகள், வடிகால்கள், சமூக மண்டபங்கள் மற்றும் சோலார் விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த, ஏற்கனவே 2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட RM10 மில்லியனும் அடங்கும்.
தவிர, மித்ரா ஒருங்கிணைக்கும் PPSMI 2025 எனப்படும் இந்தியச் சமூக-பொருளாதார மேம்பாட்டு திட்டம் மூலம் கூடுதலாக RM5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது; இது அடிப்படை வசதிக் கட்டமைப்பு, பொது இடங்கள் மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும்.
30 மேம்பாட்டுத் திட்டங்களுக்காக சிலாங்கூருக்கு மட்டும் RM5.755 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இம்முயற்சிகள் மடானி கொள்கைக்கு ஏற்ப, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுடன், பொருளாதார மற்றும் சமூக வாய்ப்புகளையும் உருவாக்கும் என அமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்தார்