
டென்பசார், ஜூலை 3 – இந்தோனேசியாவின் பிரபல உல்லாச தீவான பாலியில் பெர்ரி மூழ்கிய சம்பவத்தில் காணாமல்போன 29 பேரை மீட்புக் குழுவினர் தேடிவருகின்றனர்.
புதன்கிழமை இரவு மணி 11.20 அளவில் நிகழ்ந்த இந்த பேரிடரில் ஆறு பேர் இறந்தனர்.
மூன்று வயது சிறுவன் மற்றும் அவனது தாயரின் உடல் இன்று பிற்பகலில் கண்டுப்பிடிக்கப்பட்டது.
மீட்புக் குழுவினரால் கண்டுப்பிடிக்கப்பட்ட ஆறு உடல்களையும் Banyuwangiயிலுள்ள அவர்களது குடும்பத்தினர் கொண்டுச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
53 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் பெர்ரி மூழ்கியதைத் தொடர்ந்து இன்று 30 பேர் மீட்கப்பட்டதாக இந்தோனேசியாவின் தேசிய தேடும் மற்றும் மீட்புக் குழுவின் தலைவர் முகமட் ஷபி ( Mohammad Syafii) தெரிவித்தார்.
புதன்கிழமை இரவில் கிழக்கு ஜாவா நகரான Ketapang போர்ட்டிலிருந்து பாலியின்
Gilimanuk Portட்டிற்கு புறப்பட்ட அரைமணி நேரத்திற்குப் பிறகு பெர்ரி மூழ்கியது.
மீனவர்கள் மற்றும் கரையோர மக்களின் உதவியோடு helicopter மற்றும் 15 படகுகள் மூலம் உயிர் தப்பியவர்களை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்தோனேசியாவின் முக்கிய ஜாவா தீவிலிருந்து பிரபலமான விடுமுறை தளமான பாலிக்கு சென்று கொண்டிருந்தபோது அந்த பெர்ரி மூழ்கியதாக சுரபாயாவைச் சேர்ந்த தேடும் மற்றும் மீட்பு நிறுவனம் தெரிவித்தது.
14 டிரக்குகள் உட்பட 22 வாகனங்களை அந்த பெர்ரி ஏற்றியிருந்த நிலையில் சேவையில் ஈடுபட்டிருந்தபோது மூழ்கியதில் இன்று அதிகாலையில் நால்வர் மீட்கப்பட்டனர் .
தென் கிழக்காசியாவில் சுமார் 17,000 தீவுக் கூட்டங்களைக் கொண்ட இந்தோனேசியாவில் மோசமான பாதுகாப்பு தரத்தினால் கடல் பயண சேவையில் ஈடுபட்டுவரும் பெர்ரி மற்றும் படகுகள் தொடர்பான விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.