Latestஉலகம்

இந்தியாவில் இணையத்தில் வாங்கிய நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு; தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய உத்தரவு

திருச்சி, செப்டம்பர் 4 – இந்தியா, திருச்சியில் 15 வயது சிறுமி நூடுல்ஸ் சாப்பிட்டு பரிதபமாக உயிரிழந்த சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது.

ரயில்வே ஊழியராக பணிபுரிபவரின் மகளான இந்த 15 வயது சிறுமி, அமேசானில் ஆர்டர் செய்த சீன நிறுவனத்தின் புல்டாக் என்ற நூடுல்ஸ் (Buldak Noodles) மற்றும் குளிர்பானத்தைச் சாப்பிட்டு விட்டு தூங்கிய நிலையில், உயிரிழந்துள்ளார்.

சிறுமி உயிரிழப்புக்கு பின் விழித்துக்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இதில் திருச்சியில் நூடுல்ஸ் மொத்த விற்பனையாளரிடம் 800 கிலோ காலாவதியான நூடுல்ஸ் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே சிறுமி உயிரிழந்த சம்பவம் பேசுபொருளானதால், தமிழகம் முழுவதும் நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!