Latestஇந்தியாஉலகம்

இந்தியாவில் வயதான ஆடவர் தனது மனைவி. மருமகள் மற்றும் 4 வயது பேத்தியை சுத்தியலால் அடித்து கொன்றார்

ஒடிசா, மார்ச் 13-இந்தியாவில் ஒடிசாவில் குடும்பத் தகராறில் தனது குடும்பத்தில் மூன்று பேரை சுத்தியலால் கொன்றதாகக் கூறப்படும் ஒரு முதியவர் தப்பி ஓடிவிட்டார்.

புதன்கிழமை இரவு வீட்டிலுள்ள தனது மனைவி , மருமகள் மற்றும் நான்கு வயது பேத்தி ஆகியோரை அந்த முதியவர் தாக்கியுள்ளார். இந்த துயரச் சமபவம் இரவு மணி 11.30 அளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

ரமேஷ் காரியா என்ற நபர் தனது மனைவி குல் காரியாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கும் விதமாக, குல் தனது மருமகள் லிபி மஹாகுலிடம் உதவிக்காக ஓடியுள்ளார்.

அதன் பிறகு ரமேஷ் ஆத்திரத்தில், அவ்விரு பெண்களையும் சுத்தியலால் தாக்கி, உடனடியாக அவர்களைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. அதோடு தனது பேத்தி இஷாளியைம் சுத்தியலால் தாக்கிய பின்னர் அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

ரமேஷின் மகன் தீரன் காரியா வீடு திரும்பியபோது உடல்களைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்ததோடு , உடனடியாக இச்சம்பவம் குறித்து போலீசிற்கு தகவல் கொடுத்தார்.

சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வருகை தந்த போலீஸ் அதிகாரிகள் இது குறித்து விசாரணையை துரிதப்படுத்தினர். அக்கம் பக்கத்தினர் மற்றும் கிராமவாசிகளிடம் போலீசார் பல்வேறு தகவல்களை திரட்டினர்.

இந்த சம்பவத்திற்கு குடும்ப தகராறுதான் முக்கிய காரணம் என்று நம்பப்படுவதாக போலீஸ் அதிகாகள் தெரிவித்தனர். தப்பியோடி நபரை கண்டுப்பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!