
கோலாலம்பூர், டிச 31 – ஆஸ்திரேலியா அரசு இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் விவசாய பொருட்கள், மருந்து பொருட்கள், உணவு பொருட்கள் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு தேவையான இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் அனைத்து பொருட்களுக்கும், இறக்குமதி வரியை தள்ளுபடி செய்து 2026 புத்தாண்டு பரிசாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் உள்ள சிறு மற்றும் குறுந்தொழில் அதிபர்கள் ஏற்றுமதியாளர்கள் என அனைத்து துறைகளிலும் உள்ள தொழில் நிறுவனங்கள் பயனடைய உள்ளன.
இவ்வறிவிப்பின் மூலம் கடந்த ஆண்டை விட இவ்வாண்டு 50% ஏற்றுமதியில் விரிவடையும் என உலக தமிழ் வர்த்தக சங்கத் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.
இதன் மூலம் ஆசிரியரேவில் உள்ள சிறு குறுந் தொழில் செய்பவர்களும் இந்தியாவில் உள்ள சிறு குறுந் தொழில் அதிபர்களும் இணைந்து செயல்பட பல்வேறு வாய்ப்புகள் உருவாகும் என தெரிவித்தார்.
மேலும் ஆஸ்திரேலியா பிரதமருக்கும் இந்திய பிரதமருக்கும் உலகத் தமிழ் வர்த்தக சங்கம் தன்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என அவர் கூறினார்.



