நாட்டில் அடிக்கடி ஏற்படும் மதங்களை இழிவுபடுத்தும் விவகாரங்களைக் களைய அரசாங்கம் சமய நல்லிணக்கச் சட்டத்தை இயற்றுமா என ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN Rayer மக்களைவில்
கேள்வி கேட்டார்.
அதற்கு ஒற்றுமை துறை துணையமைச்சர் சரஸ்வதி, இருக்கின்ற சட்டங்களே போதுமானது என்றும் புதிய சட்டம் தேவையில்லை என்றும் பதிலளித்தார்.
அப்படியென்றால் இந்து மதத்தை இழிவுபடுத்திய Zambri Vinoth மற்றும் Firdaus Wong மீது ஏன் சட்டத்துறை தலைவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ராயர் மீண்டும் கேள்வி எழுப்பினார்.
சட்ட அமுலாக்கத்தை இன்னும் கடுமையாக்குவது, தண்டனையை அதிகரிப்பது போன்றவற்றின் அப்பிரச்சனயை களைவதோடு நாட்டின் சமய நல்லிணக்கத்தை உறுதி செய்ய ஒற்றுமை அமைச்சு என தனி அமைச்சே இருப்பது மலேசியாவின் கூடுதல் சிறப்பம்சம் என்றார் சரஸ்வதி.