இன்னும் மூடப்பட்ட நிலையில் இருக்கும் திரெங்கானு குவா மூசாங் Jalan Aring சாலை

திரெங்கானு, டிசம்பர் 30 – குவா மூசாங் மாவட்டத்தில் இருந்து திரெங்கானு எல்லையை இணைக்கும் Jalan Aring சாலை, கடந்த 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலத்தாழ்வு காரணமாக இன்றுவரை மூடப்பட்டுதான் உள்ளது என்று பொதுப்பணித்துறையான ஜ்குர் உறுதிப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் சேதமடைந்த அந்தச் சாலையில் நான்கு சக்கர வாகனம் சென்றதாகக் காணொளி பரவியது. ஆனால், அந்த வீடியோ ஜூன் மாதத்தில் எடுக்கப்பட்ட பழைய பதிவு என்றும், மீண்டும் பகிரப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டதாகவும் JKR தெரிவித்தது.
இந்த சாலை 2022 முதல் ஒருபோதும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை என்றும், பழுது நீக்கும் பணிகள் நடைபெறும் பகுதியாக இருப்பதால் அங்கு செல்லுதல் சட்டவிரோதம் மற்றும் ஆபத்தானது என்றும் கிளாந்தான் JKR இயக்குநர்,கூறினார்.
இதனிடையே, குவா மூசாங் மாவட்ட காவல் துறைத் தலைவர், சாலை மூடல் உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பற்ற பாதையில் செல்லுதல் உயிருக்கு ஆபத்தானது என்றும் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.



