Latestமலேசியா

இப்போது வாங்குவீர் பின்னர் பணம் செலுத்துவீர் திட்டத்தில் கடன் சுமைக்கு உள்ளாகும் மாணவர்கள் உயர்க் கல்வி அமைச்சு கடுமையாக கருதுகிறது

கோலாலம்பூர், ஜூலை 9 – இப்போது வாங்குவீர் – பின்னர் பணம் செலுத்துவீர் என்ற திட்டத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் அதிக கடன் சுமைக்கு உள்ளாகியிருப்பது குறித்து உயர்க்கல்வி அமைச்சு கவலை அடைந்துள்ளதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் Zamry Abdul Kadir தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்காக முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து இதன் தொடர்பில் உயர்க்கல்வி நிலையங்களின் மாணவர்களுக்கு நினைவுறுத்த வேண்டியிருப்பதாக அவர் கூறினார்.

வாழ்க்கையை மோசமாக்கும் மற்றும் அதிக வட்டி விகிதத்தில் பணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்பதை உணராமலேயே இத்தகைய கடன் திட்டங்களில் சிக்கிவிட வேண்டாம் என உயர்க்கல்வி நிலைய மாணவர்களுக்கு தாம் நினைவுறுத்த விரும்புவதாக Zamry தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து சில தரப்பினர் தம்மிடம் தெரிவித்துள்ளதாகவும் , இத்தகைய கடன் திட்டத்தில் சிக்கிவிட வேண்டாம் என மாணவர்களுக்கு நினைவுறுத்தியுள்ளதாக இன்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் ஆசியான் வௌயுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் அவர் இத்தகவலை வெளியிட்டார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு இறுதிவரை முதலில் வாங்குவீர் , பின்னர் பணத்தை செலுத்துவீர் திட்டத்தின் கணக்கில் 5.1 மில்லியன் பேர் தீவிரமாக உள்ளனர். அந்த திட்டத்தின் பட்டுவாடா 149 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக 12 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்திருப்பதையும் Zamry சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!