
இமாச்சலம், ஆகஸ்ட்-6 – இந்தியாவின் இமயமலைப் பகுதியில் அடைமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் ஒரு மலைப் பள்ளத்தாக்கே தரைமட்டமானது.
ஒரு நகரத்தின் பெரும்பகுதி அழிந்ததில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர்.
மரண எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் சுற்றுலாப் பகுதியான தாராலியில் சேற்று நீர் பெருக்கெடுத்து ஓடுவதை இந்திய ஊடகங்களில் ஒளிபரப்பான வீடியோக்கள் காட்டுகின்றன.
இதையடுத்து மீட்புக் குழுக்கள் “போர்க்கால அடிப்படையில்” செயல்படுவதாக மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
பிரதான வெள்ளம் வடிந்த பிறகு, அந்த இடத்திலிருந்து இராணுவத்தால் வெளியிடப்பட்ட படங்கள் மெதுவாக நகரும் சேற்றைக் காட்டியது.
நகரத்தின் பெரும் பகுதி குப்பைகளால் நிரம்பியிருந்தது.
சில இடங்களில், வீடுகளின் கூரைகளில் சேறு படிந்திருந்தது.
இந்தத் துயரத்தில் உயிரிழப்புகளைச் சந்தித்த குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.
மக்களுக்கு உடனடி உதவி வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் அந்தப் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், உத்தரகாண்டின் உட்புறப் பகுதிகளில் சுமார் 8 அங்குலத்திற்கு மழைக் கொட்டித் தீர்த்துள்ளது.