
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 11 – தோட்டவியல் மற்றும் மூலப்பொருட்கள் துறை அமைச்சராக பதவி வகித்து வந்த டத்தோஸ்ரீ ஜோஹாரி பின் அப்துல் கானி அவர்கள், உடனடியாக இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் பதவியில் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அகமது இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதென்று அறியப்படுகின்றது.
இந்நிலையில் ஜொஹாரி கானி அவர்கள் திதிவாங்சா நாடாளுமன்ற உறுப்பினராகவும், அம்னோவின் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார்.
மேலும், ரஃபிஸி ராம்லியின் பதவி விலகளைத் தொடர்ந்து, இரண்டாவது நிதியமைச்சர் அமீர் ஹம்சா அசிசான் பொருளாதார அமைச்சரின் கடமைகள் மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்வார் என்றும் கடந்த மாதம் அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது.
கடந்த மே மாதம் நடந்த PKR தேர்தல்களில் துணைத் தலைவர் பதவிகளைப் பாதுகாக்கத் தவறியதைத் தொடர்ந்து ரஃபிஸி மற்றும் நிக் நஸ்மி ஆகியோர் அமைச்சர்கள் பதவியை விட்டு விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.