
லண்டன், நவம்பர்-23 – ஆப்பிரிக்கா கண்டம் மீண்டும் இரண்டாகப் பிளப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அரேபியா பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து பிரிந்தது.
இப்போது, அதே புவிசார் சக்திகள் கிழக்கு ஆப்பிரிக்கா முழுவதும் புதிய பிளவை உருவாக்குவதாக, பிரிட்டனின் Keele ஆராய்ச்சி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கண்டத்தின் அடித்தட்டு மெதுவாக இழுக்கப்படுவதை காந்த தரவுகள் மூலம் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தப் பிளவும் பிரிவும் 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகளில் முழுமையடைந்து, நடுவே புதிய பெருங்கடல் தோன்றும்.
அப்போது கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான சோமாலியா, கென்யா, தான்சானியா, மொசாம்பிக் மற்றும் எத்தியோப்பியாவின் பெரும்பகுதிகள் தனிப்பெரும் தீவாக பிரிந்துசெல்லும்.
எகிப்து, சூடான், நைஜீரியா, கானா, சாம்பியா, கோங்கோ ஜனநாயக் குடியரசு உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ஆப்பிரிக்க பெருநிலத்தில் நீடிக்கும்.
எத்தியோப்பியா, கென்யா போன்ற நாடுகளில் ஏற்கனவே எரிமலை வெடிப்புகள், நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.
இதுவே இந்த நில பிளவுக்கான ஆரம்ப அறிகுறிகளாகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.



