
காஜாங், அக்டோபர்-21, காஜாங் சில்க் நெடுஞ்சாலையின் மூன்றாவது கிலோ மீட்டரில் உரசிய வாக்கில் காரால் இடித்துத் தள்ளப்பட்டதில், மோட்டார் சைக்கிளோட்டி தலையில் படுகாயமடைந்தார்.
பின்னால் வந்த வாகனத்தின் dashcam-மில் பதிவான அவ்விபத்து, சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தின் போது, 45 வயது அந்த மோட்டார் சைக்கிளோட்டி சாலையின் ஆக வலப்புறத்தில் போய்க் கொண்டிருந்தார்.
அப்போது வேகமாக வந்த கார் அவரை முந்தி, உரசி கடைசியில் இடித்துத் தள்ளியது.
இதனால் சாலையில் விழுந்த மோட்டார் சைக்கிளோட்டி தலையில் படுகாயமடைந்து, செர்டாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனமோட்டியதற்காக சம்பந்தப்பட்ட காரோட்டியை போலீஸ் தேடுகிறது.