Latestஉலகம்

இரவில் நாடு முழுவதும் சேவைத் தடைக்குள்ளான வாட்சப்

கோலாலம்பூர், ஏப்ரல்-13, Meta நிறுவனத்துக்குச் சொந்தமான சமூக ஊடகச் செயலியான வாட்சப், நேற்றிரவு நாடளாவிய நிலையில் சேவைத் தடங்கலுக்கு ஆளானது.

வாட்சப்பில் தகவல் அனுப்பவோ பெறவோ முடியாமல் மலேசியப் பயனர்கள் தவித்தனர்.

பொறுமை இழந்தவர்கள், X தளத்தில் WhatsApp Down என்ற _hashtag_குகளை உருவாக்கி தங்களின் ஆதங்களை வெளிப்படுத்தியதைக் காண முடிந்தது.

இரவு 10.30 மணியிலிருந்து அச்சேவையைப் பயன்படுத்துவதில் பிரச்னை ஏற்பட்டதாக, DownDetector இணையத் தளம் கூறியது.

குறைந்தது 597 புகார்கள் பெறப்பட்டன; அவற்றில் 85 விழுக்காட்டு புகார்கள் தகவல் அனுப்புதல் மற்றும் பெறுதல் பிரச்னை பற்றியதாகும்.

12 விழுக்காட்டு புகார்கள் வாட்சப்பின் பொது செயல்பாடு குறித்தவை; மேலும் 3 விழுக்காட்டுப் புகார்கள் வாட்சப்பில் நுழைய முடியாதது தொடர்பானவை.

எனினும், இந்த சேவைத் தடங்கல் குறித்து வாட்சப் நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.

Meta-வின் மற்ற சமுக ஊடகங்களான facebook, instagram போன்றவை பாதிக்கப்பட்டதாக தகவலேதும் இல்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!