
சென்னை, ஜனவரி-17 – ஹாலிவூட் இசையயைப்பாளர் Hanz Zimmer-ருடன் இணைந்து ‘இராமாயணா’ படத்திற்கு தாம் இசையமைத்து வருவதை பெரும் பெருமையாகக் கருதுவதாக, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.
ஓர் இஸ்லாமியராக இருந்துகொண்டு, இந்து மதம் சார்ந்த படத்தில் பணியாற்றுவதை பலர் கேள்வி எழுப்பலாம்.
ஆனால் இதில் வெட்கப்பட வேண்டியது எதுவுமில்லை என்றார் அவர்.
“நான் இஸ்லாமியன், Zimmer ஓர் யூதர். நாங்கள் இருவரும் இணைந்து இந்து தொடர்பான படத்தில் வேலை செய்கிறோம். இது உண்மையிலேயே கிடைத்தற்கரிய வாய்ப்பு” என அவர் சொன்னார்.
தவிர, பிராமணர் பள்ளியில் படித்த தமக்கு இராமாயணம் மிகவும் பரிச்சையமான கதையென்றும், நல்லவர்கள் கெட்டவர்கள் பற்றியக் கதை என்றும் ரஹ்மான் சொன்னார்.
எனவே மதத்தின் பெயரால் எற்படும் குறுகிய மனப்பான்மையிலிருந்து விடுபட்டால் தான் நம்மால் பிரகாசிக்க முடியும் என்றும், ஆஸ்கார் நாயகனான ரஹ்மான் கூறினார்.
இராமாயணம், இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலத்திற்கே பொருந்தும் ஆன்மீகக் காவியமாகும்.
இந்நிலைமில், பாரம்பரியத்தையும் புதுமையையும் இணைத்து, பக்தி உணர்வை தூண்டும் இசையை உருவாக்குவதே தமது நோக்கம் என்றார் அவர்..



