
பெய்ஜிங், மே 26 – சீனாவைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர், இருட்டில் பார்க்க உதவும் அகச்சிவப்பு காண்டாக்ட் லென்ஸ்களை உருவாக்கியுள்ளார். சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு வழக்கத்திற்கு மாறானது என்பதோடு அதனை அணிந்திருப்பவர் கண்களை மூடியிருந்தாலும் பார்க்க முடியும் என NDTV Portal தெரிவித்தது.
இது பாரம்பரிய காண்டாக்ட் லென்ஸ்களில் காணப்படும் நெகிழ்வான பாலிமர்களை நானோ துகள்களுடன் இணைக்கிறது. பாரம்பரிய இரவுப் பார்வையைப் போலன்றி, லென்ஸுக்கு சக்தி ஆதாரம் தேவையில்லை என மே 22 ஆம் வெளியான Cell சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.