Latestஇந்தியாஉலகம்

இறந்த பெண்ணை சாவிலிருந்து மீட்ட சாலையில் இருந்த குழி; உத்திர பிரதேசத்தில் அதிசயம்

உத்திர பிரதேசம், மார்ச் 12 – பொதுவாகவே சாலையில் ஏற்பட்ட குழியால் பல உயிர்கள் பறிப்போன சம்பவத்தைதான் கேள்வி பட்டிருப்போம், நேரில் பார்த்திருப்போம்.

ஆனால், உத்திர பிரதேசத்திலோ, மூளைச் சாவடைந்த 50 வயது பெண்ணை மீட்டுக் கொடுத்துள்ளது சாலை குழி ஒன்று.

உனிதன் எனும் எழுத்தாளர் ஒருவர் திடிரென உடல் சுகவீனத்தால் மோசமடைய, குடும்பத்தார் அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் மேற்சிகிச்சைக்காக அவர் பரேலியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லபட்டுள்ளார்.
அங்கோ அவர் மூளைச் சாவடைந்து விட்டதாக கூற, இறுதிச் சடங்கை மேற்கொள்ள வீட்டிற்கு ஆம்புலன்ஸில் அப்பெண்ணின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

ஆனால், அதிசயம் என்னவென்றால் ஆம்புலன்ஸ் சாலையில் ஒரு குழியில் இறங்கி ஏறியபோது இறந்த பெண் சுவாசித்தூ உயிர்பெற்றதற்கான அறிகுறிகளை காட்டியுள்ளார். அதுர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்த அப்பெண்ணின் கணவர் உடனே அவரை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கே சிகிச்சை வழங்கப்பட்டு 13 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார் மரணத்தை வென்ற அப்பெண்.

ஆனால் வலைத்தளவாசிகளின் விவாதம் என்னவோ, அப்பெண்ணை காப்பாற்றியது விதியா அல்லது சாலை குழியா என நக்கலாக விவாதித்து வருகின்றனர்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!