Latestமலேசியா

இறைச்சி பொட்டலத்திற்குள் மறைத்து கடத்திய காண்டாமிருகக் கொம்புகள்; பேங்காக்கில் வியட்னாமியர் கைது

இறைச்சி பொட்டலத்திற்குள் மறைத்து கடத்திய காண்டாமிருகக் கொம்புகள்; பேங்காக்கில் வியட்னாமியர் கைது

பேங்காக், பிப்ரவரி 11-

இறைச்சி பொட்டலத்திற்குள் 11க்கும் மேற்பட்ட கண்டா மிருகங்களின் கொம்புகளை மறைத்து கடத்திய சந்தேகத்தின் பேரில் ஆடவன் ஒருவனை தாய்லாந்து அதிகாரிகள் கைது செய்யதனர். 36 வயதுடைய வியட்னாமிய நபர் கைது செய்யப்பட்டதன் மூலம் அனைத்துலக வனவிலங்கு கடத்தல் கும்பலுடன் அவனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

திங்கட்கிழமை பேங்காக்கின் பிரதான அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்தபின் சட்டவிரோதமாக வனவிலங்கு உடல் பாகங்களை கடத்தியதன் தொடர்பில் அந்த ஆடவன் கைது செய்யப்பட்டதாக தாய்லாந்து பூங்கா, வனவிலங்கு மற்றும் தாவர மறுசீரமைப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

ஜனநாயக கொங்கோ குடியரசின் Lunumbashi யிலிருந்து லாவோஸிற்கு எத்தியோப்பியா மற்றும் தாய்லாந்து வழியாக அந்த நபர் பயணித்து வந்ததாக கூறப்பட்டது.

விமான நிலைய அதிகாரிகளும் போலீசாரும் ஆறு காண்டாமிருகக் கொம்புகளையும், பாலிஸ்டிரீன் ஐஸ் பெட்டியில் கொம்புகளை மறைத்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட சுமார் 12 கிலோ அடையாளம் தெரியாத இறைச்சியையும் பறிமுதல் செய்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!