
கோலாலம்பூர், 6 மார்ச் 2025 – இலக்கவியல் அமைச்சின் முயற்சியோடு EmpowerHer Digital திட்டம், MDEC எனப்படும் மலேசியன் இலக்கவியல் பொருளாதார கார்ப்பரேஷன் மற்றும் டிஜிட்டல் மூலம் இயக்கப்படும் SMECorp மலேசியா நேஷனல் பெர்ஹாட் (DNB) ஆதரவுடன் தொடங்கப்பட்டுள்ளது.
இலக்கவியல் திறன்கள் மற்றும் சந்தையில் ஈடுபாட்டைக் கொண்ட குறைந்த வருமானம் கொண்ட B40 பெண்களுக்கு டிஜிட்டல் பொருளாதாரத்தில் வருமானம் மற்றும் நிலையான வர்த்தகத்தை உருவாக்கும் நோக்கத்தை கொண்டிருப்பதாக இலக்கயவில் அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.
இலக்கவியல் ஏற்றத்தாழ்வை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியைக் கொண்ட இந்த திட்டத்தில் பட்டறை கலந்துரையாடல், தொழில் துறையில் அனுபவத்தை பகிர்ந்து கொள்வது மற்றும் வாய்ப்பு வழங்கும் சிறு கண்காட்சிகள் , பங்கேற்பாளர்களுக்கு இலக்கவியல் வர்த்தக உத்திகள் மற்றும் ஆனலைன் வர்ததக வாய்ப்புகளையும் இத்திட்டம் வழங்குவதாக கோபிந்த் சிங் தெரிவித்தார்.
-Gobind singh-
இதனிடையே EmpowerHer Digital பயிற்சி மட்டுமின்றி B- 40 பெண்களுக்கு இலக்கவியல் திறன், சந்தை வாய்ப்பு மற்றும் போட்டா போட்டியிடும் வர்ததக திறனையும் வழங்குவதாக MDECக்கின் தலைமை நிர்வாக அதிகாரி Anuar Fariz Fadzil தெரிவித்தார்.
இதனிடையே இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிலர் தங்களது அனுபவத்தை வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்துகொண்டனர்.
-partcipants interview-
பெண்கள் தொழிற்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தும் ஆற்றலை தெரிந்து கொள்வதோடு மட்டுமின்றி இலக்கவியல் பொருளாதாரத்தில் புத்தாக்க செயல்பாடுகளிலும் ஈடுபடும் வாய்ப்பையும் இது வழங்குகிறது.