Latestமலேசியா

இவ்வாண்டு 25,000த்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் மலேசியாவுக்குள் நுழைய அனுமதியில்லை – சைபுடின் நசுட்டியோன்

கோலாலம்பூர், அக் 16- இவ்வாண்டு  25,000 த்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் மலேசியாவிற்குள் நுழைவதற்கு அனுமதியில்லை என்ற நோட்டிஸ் வெளியிடப்பட்டுள்ளது.  வெளிநாட்டினரை   சட்டவிரோதமாக  கொண்டுவரும் கும்பலின்   நடவடிக்கையை தடுப்பதற்காக  நாட்டின் 

நுழைவு முனையங்களில்  சோதனையை அமைச்சு கடுமையாக்கியுள்ளதாக  உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ   சைபுடின்  நசுட்டியோன் இஸ்மாயில் ( Saifuddin Nasution Ismail ) நாடாளுமன்றத்தில்  தெரிவித்தார்.   இவ்வாண்டு   47  கும்பல்களை   அமலாக்க நிறுவனங்கள் முறியடித்துள்ளதோடு வெளிநாட்டினரை சட்டவிரோதமாக கொண்டுவரும் கும்பலைச் சேர்ந்த  1,285 உறுப்பினர்கள் மற்றும்   ஆவணங்களைக் கொண்டிருக்காத  குடியேறிகளும் கைது செய்யப்பட்டதாக  அவர்  கூறினார்.   

அந்த  சட்டவிரோத கும்பலுக்கு எதிராக அரசாங்கம் எடுத்துள்ள மூன்று   முயற்சிகளில் இவை அடங்கும்.  வலுவான ஒத்துழைப்பின் மூலம்  சட்டவிரோத தொழிலாளர்களை நாட்டிற்குள் கடத்திவரும்   கும்பலின்  முயற்சிகளை துடைத்தொழிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்துவதற்கு  குடிநுழைவுத்துறை, போலீஸ் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் இதர அமலாக்க நிறுவனங்கள்  தொடர்ந்து   தங்களது செயல்பாட்டை தீவிரப்படுத்தி வருவதாக   சைபுடின் தெரிவித்தார். தகுதி பெற்றவர்கள் மட்டுமே நாட்டிற்குள் நுழைவதை உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனையையும்  நாங்கள் வலுப்படுத்தியுள்ளோம் என மக்களவையில் பெரிக்காத்தான்  நேசனல் கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ தகியுடின்   ஹசான் (  Takiyuddin  Hassan ) எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது  சைபுடின்  இத்தகவலை வெளியிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!