Latestமலேசியா

இஸ்கண்டார் புத்ரியில் குழந்தையைப் புறக்கணித்து, சடலத்தை அப்புறப்படுத்தியதாக குழந்தைப் பராமரிப்பாளர் மீது குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-29 – 12 மாத பெண் குழந்தையை அலட்சியப்படுத்தி, கடந்த மாதம் அதன் சலடத்தை அப்புறப்படுத்தியதன் பேரில், குழந்தைப் பராமரிப்பாளரான ஒரு பெண் ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றங்களில் இன்று குற்றம் சாட்டப்பட்டார்.

ஜூலை 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் இஸ்கண்டார் புத்ரியில் Horizon Hills, Jalan Hijauan 2 அருகேயுள்ள வீட்டொன்றில் அக்குற்றங்களைப் புரிந்ததாக, இரண்டு நீதிமன்றங்களிலும் தனித்தனியாக குற்றம் சாட்டப்பட்டது.

இருப்பினும், இரண்டையும் 46 வயதுGoh Mui Leng மறுத்தார்.

முதல் குற்றத்திற்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறையும் 50,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.

குழந்தையின் மரணத்தை மறைத்து, தண்டனையிலிருந்து தப்பிக்கும் நோக்கில் அதன் உடலை அப்புறப்படுத்திய இரண்டாவது குற்றச்சாட்டு நிரூபணமானால், 7 ஆண்டுகள் சிறையும் அபராதமும் விதிக்கப்படும்.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் RM10,000 ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், வழக்கு அக்டோபர் 3-ஆம் தேதி மறுசெவிமெடுப்புக்கு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!