
இஸ்கண்டார் புத்ரி, டிசம்பர்-31 – ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியில் உணவுப் பொருள்களை அனுப்புபவராக நடித்து, காலியான வீடுகளில் புகுந்து திருடியதன் பேரில், 49 வயது ஆடவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
டிசம்பர் 26-ஆம் தேதி, தாமான் ஆஸ்டின் பெர்டானாவில் அவ்வாடவர் சிக்கியதாக, மாவட்ட போலீஸ் தலைவர் M. குமராசன் தெரிவித்தார்.
புக்கிட் இண்டா பகுதியில் 3 வீடுகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் அந்நபர் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிறார்.
அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள், கார், மடிக்கணினி, கைப்பேசி, வீடியோ விளையாட்டுக் கருவி, போலி வாகன எண் பட்டை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
அந்நபர் போதைப்பொருள் பயன்படுத்தியதும் உறுதிச் செய்யப்பட்டது.
குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான பழையக் குற்றப் பதிவுகளும் வைத்திருந்தார்.
விசாரணைக்காக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.



