
கோலாலம்பூர், மார்ச் 10 – இஸ்லாத்தை சிறுமைப்படுத்திய குற்றச்சாட்டை விஜயன் சவுரிமுத்து ஒப்புக்கொண்டடு மன்னிப்புக் கோரியுள்ளார்.
முகநூலில் இஸ்லாத்தை சிறுமைப்படுத்தி
பதிவேற்றம் செய்ததைத் தொடர்ந்து தாம் தவறு செய்திருப்பதை சவரிநாதன் ஒப்புக் கொண்டார்.
இதற்கு முன் தனியார் வானொளியின் நிருபர்கள் இந்து சமயத்தை சிறுமைப்படுத்தியதால் ஏற்பட்ட சினத்தினால் தாம் இவ்வாறு செய்ததாக அவர் கூறினார்.
அனைவரிடமும் மனப்பூர்வமாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
நான் அவ்வாறு செய்திருக்கக் கூடாது. தனியார் வானொலி அறிவிப்பாளர்கள் அவ்வாறு செய்ததால் தாங்க முடியாமால் நானும் சிறுமைப்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளானதாக விஜயன் சவுரிநாதன் தனது முகநூலில் விளக்கமளித்துள்ளார்.
வெளிநாட்டைச் சேர்ந்த விஜயன் மூன்று நிமிடம் செய்திருந்த அந்த காணொளி குறித்து புக்கட் அமான் விசாரணையை மேற்கொண்டதாக இதற்கு முன் போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ஸ்ரீ ரஷாருடின் உசேய்ன் கூறியிருந்தார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 298 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது, இது இனம் மற்றும் சமயத்திற்கிடையே நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகும்.
அத்துடன் நெட்வொர்க் வசதிகள் அல்லது நெட்வொர்க் சேவைகளை முறையற்ற முறையில் பயன்படுத்துவது தொடர்பாக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998 இன் பிரிவு 233 கீழும் விசாரிக்கப்பட்டு வருகிறது.