
ஈப்போ, ஜனவரி-31-ஈப்போவில் வியாழக்கிழமை நிகழ்ந்த சம்பவத்தில் 63 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் சமையல் எரிவாயு தோம்பு வெடித்து படுகாயமடைந்தார்.
அதிகாலை 5 மணியளவில், கடுமையான எரிவாயு வாடை வீசியதை உணர்ந்து மகள் தூக்கத்திலிருந்து எழுப்ப, மூதாட்டியும் இன்னொரு மகளும் என மூவருமாக வீட்டுக்கு வெளியே ஓட முயன்றனர்.
அப்போது திடீரென மூதாட்டி சமயலறைக்குச் சென்று எரிவாயு தோம்பின் வால்வை மூட முயன்ற போது வெடிப்பு ஏற்பட்டது.
இதனால் முகம் மற்றும் உடலில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
உடனடியாக ராஜா பெர்மாய்சூரி பைனூன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவர் உயிருக்குப் போராடி வருகிறார்.
இரு மகள்களும் உயிர் பிழைத்தனர்.



