Latestமலேசியா

ஈப்போவில் திடீரென பாதை மாற்றிய லாரி; முதிய மோட்டார் சைக்கிளோட்டி மரணம், மனைவி காயம்

ஈப்போ, டிசம்பர்-9 – ஈப்போவில், சாலையில் வலது பக்கம் சமிக்ஞை தந்து விட்டு திடீரென இடப்பக்கத்தில் புகுந்த லாரியின் செயல், ஒரு முதியவரின் உயிரையே பறித்துள்ளது.

சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஈப்போ – லூமூட் சாலையில் அத்துயரம் நிகழ்ந்தது.

23 வயது இளைஞர் ஓட்டிச் சென்ற லாரியின் அச்செயலால், பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், லாரியின் பக்கவாட்டில் மோதியது.

இதனால் கீழே விழுந்த 60 வயது Ahmad Taufik Abu Bakar சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரின் 61 வயது மனைவி Azizah Mat Jamat, இடது கால் எலும்பு உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து விசாரணைக்காக லாரி ஓட்டுநர் கைதானார்.

அதே சமயம், அந்த மோட்டார் சைக்கிளுக்கு சாலை வரி இல்லை என்பதோடு காப்பீடும் காலாவதியாகி இருந்தது கண்டறியப்பட்டது.

30 வினாடி சம்பவ வீடியோ முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலாகி லாரி ஓட்டுநருக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!