
கோலாலம்பூர், செப்டம்பர் 2 – ஹாலிவுட் நடிகர் டுவைன் “தி ராக்” ஜான்சன் (Dwayne ‘The Rock’ Johnson), தனது புதிய படமான ‘தி ஸ்மாஷிங் மெஷின்க்காக’ (The Smashing Machine) சுமார் 27 கிலோ கிராம் எடையைக் குறைத்து மெலிந்த தோற்றத்தில் காட்சியளித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
53 வயதான ஜான்சன், இந்த வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் முன்னாள் UFC சாம்பியன் மார்க் கெர் (Mark Kerr) கதாபாத்திரத்தில் நடித்துள்ளதைத் தொடர்ந்து அவர் வெனிஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றபோது அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
சில ரசிகர்கள் அவரைக் கூழாங்கல் போன்று தோன்றமளிப்பதாக கேலி செய்தாலும், பலர் அவரின் புதிய தோற்றம் கவர்ச்சியாக இருப்பதாக பாராட்டியும் வருகின்றனர் .
இந்தப் படத்தை A24 நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் பென்னி சஃப்டி இயக்குகிறார் என்றும் அறியப்படுகின்றது.
Rock நடித்து வரும் இந்தப் படம், கெர்ரினின் வாழ்க்கைச் சவால்கள், காதல் மற்றும் போதைப் பழக்கத்துக்கு எதிரான போராட்டங்கள், மற்றும் MMA வளையத்தில் அவரது வெற்றிகளைக் எடுத்துரைக்கும் வண்ணமாக அமைந்துள்ளது.