மலேசியா

உணவகத்தில் புகை பிடித்ததால் வாக்குவாதம்; கைகலப்பில் முடிந்தது

கோலாலம்பூர், ஜனவரி-10,

கோலாலம்பூரில் உள்ள ஓர் உணவகத்தில் புகை பிடித்ததைத் தொடர்ந்து, இரு ஆடவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது.

சம்பவத்தின் போது முதிய ஆடவர் உணவகத்தில் புகை பிடித்தார்.

அருகிலிருந்த குடும்பம், குறிப்பாக குழந்தை அருகில் இருந்ததால்,
அவரை எச்சரித்தனர்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் ஹொக்கியன் மொழியில்
சூடுபிடித்தது.

பின்னர், அந்த முதிய நபர் எழுந்து,
கையால் அடிக்க முயன்ற காட்சி வீடியோவாக
சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து இணையத்தில்
பெரும் விவாதம் எழுந்துள்ளது.

சிலர் புகை பிடித்தவரை குற்றம் சாட்ட, மற்றவர்கள் அவரை எச்சரித்த விதமே சண்டைக்கு காரணம் எனக் கூறுகின்றனர்.

2019 முதல், மலேசியாவில் உணவகங்களில் புகை பிடிப்பது சட்டப்படி தடைச் செய்யப்பட்டுள்ளது.

மீறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

அதே சமயம் உணவக உரிமையாளர்களுக்கும் 5 ஆயிரம் ரிங்கிட் அபராதம்
அல்லது 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!