
கோலாலம்பூர், ஜன 7 – நிதி அமைச்சு வழங்கிய ஒதுக்கீட்டை விட Prasarana Malaysia Bhd மானியக் கோரிக்கைகள் அதிகமாக இருந்தாலும், பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிக்க My50 மாதாந்திர பாஸ் முயற்சியை அரசாங்கம் தொடரும். போக்குவரத்து அமைச்சிற்கான 200 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு மானியத்தின் ஒரு பகுதியை மட்டுமே உள்ளடக்கியது, இது My50 பாஸ் பயனருக்கு மாதத்திற்கு 100 ரிங்கிட் அல்லது ஆண்டுதோறும் 1,200 ரிங்கிட் ஆகும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக்
( Anthony Loke ) தெரிவித்தார்.
Prasarana-வின் கோரிக்கைகள் உண்மையில் 200 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை விட அதிகமாக இருப்பதால் சில இழப்புகளை ஏற்க வேண்டியுள்ளது. 200 மில்யன் ரிங்கிட்கூட My50 பாஸ் திட்டத்தின் செலவை முழுமையாக ஈடுகட்ட போதுமானதாக இல்லை. இருந்தபோதிலும் My50 பாஸ் முயற்சியை பராமரிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கடந்த ஆண்டு, பட்ஜெட் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், ஆண்டு இறுதி வரை திட்டத்தைத் தொடர்ந்தோம் என அந்தோனி லோக் விவரித்தார்.



