
மஸ்ஜித் தானா, பிப்ரவரி-8 – மலாக்கா மெட்ரிகுலேஷன் கல்லூரியில் 19 வயது மாணவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.
நேற்றிரவு அங்குள்ள மண்டபத்தில் கைப்பந்து விளையாட்டு குறித்து விளக்கமளித்துக் கொண்டிருந்த போது, கோத்தா டாமான்சாராவைச் சேர்ந்த Ahmad Saffiyudeen Ahamad Nzly திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அலோர் காஜா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டவர், சிகிச்சைப் பலனளிக்காது இரவு 11.14 மணிக்கு உயிரிழந்தார்.
அம்மாணவரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய சவப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்விக்கான மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ரஹ்மாட் மாரிமான் கூறினார்.
சவப்பரிசோதனை முடிந்ததும் Ahmad Saffiyudeen சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவில் நல்டக்கம் செய்யப்படுவார்.