
உத்தரப்பிரதேசம், டிசம்பர் 11 – உத்தரப்பிரதேசத்தில், யூடியூப் வீடியோவைப் பார்த்து சிறுநீரக அறுவை சிகிச்சை செய்த போலி டாக்டரின் செயலால் பெண் ஒருவர் அநியாயமாக உயிரிழந்தார்.
மது போதையில் இருந்த அவர், கல்லை அகற்றுவதற்குப் பதிலாக பெண்மணியின் வயிறு, சிறுகுடல் மற்றும் உணவுக்குழாயின் பல நரம்புகளை வெட்டியதால், அவர் கடும் வலியுடன் மறுநாள் மரணம் அடைந்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதால் அவரின் கணவர் அவரை போலி கிளினிக்கிற்கு அழைத்துச் சென்று 20,000 ரூபாய்க்கு அறுவை சிகிச்சை செய்ய ஒப்புக்கொண்டுள்ளார்.
அறுவைச் சிகிச்சை தவறாக செய்யப்பட்டதால், பெண்மணியின் உயிர் பறிபோனது. இந்நிலையில் அந்த போலி மருத்துவர் துணை மருத்துவருடன் மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் போலீசார் அவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.



