
கோலாலம்பூர் , பிப் 24- உயர்கல்வி கழகங்களில் இணையும் மாணவர்கள் HIV பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியதில்லை.
இருப்பினும், உயர்க்கல்வி கழகங்களில் மாணவர்கள் இணையும் செயல்முறையின் ஒரு பகுதியாக பொது சுகாதார பரிசோதனைகள் இன்னும் மேற்கொள்ளப்படுகின்றன என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஷம்ரி அப்துல் காதிர் ( Zambry Abdul Kadir) தெரிவித்தார்.
பல பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே பரிசோதனையை நடத்தியுள்ளன, அதே நேரத்தில் மற்ற பல்கலைக்கழகங்கள் இன்னும் அதை கட்டாயமாக்கவில்லை. ஆனால் பல்கலைக்கழக சேர்க்கையைப் பொறுத்தவரை, பரிசோதனை பொதுவாக மேற்கொள்ளப்படுகிறது என இன்று மேலவையில் கேள்வி பதில் அமர்வின்போது அவர் குறிப்பிட்டார்.
மாணவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பதைத் தடுக்க எதிர்காலத்தில் உயர்க் கல்வி கழகங்களில் இணையும் மாணவர்கள் எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமா என்பது குறித்து செனட்டர் டாக்டர் வான் மார்டினா வான் யூசோப் எழுப்பிய துணை கேள்விக்கு பதில் அளித்தபோது ஷம்ரி இத்தகவலை வெளியிட்டார்.



