
புத்ராஜெயா, அக்டோபர்-12,
கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி கே.முனியாண்டி புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு பதவி உயர்வுப் பெற்றுச் சென்றுள்ளார்.
இன்று காலை கூட்டரசு நீதிமன்ற வளாகத்தில் அவர் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டதை, நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் உறுதிப்படுத்தினார்.
மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக புதிதாகப் பதவி உயர்வுப் பெற்றுள்ள 8 பேரில் முனியாண்டியும் ஒருவர்.
மலாயாப் பல்கலைக்கழக சட்டத் துறை பட்டதாரியான 61 வயது முனியாண்டி, 1984-ஆம் ஆண்டு தேசிய சட்டத்துறை அலுவலகத்தில் தனது வழக்கறிஞர் வாழ்க்கையைத் தொடங்கினார்.
பின்னர் சீனியர் மாஜிஸ்திரேட் நிதிபதியாகப் பணியாற்றியவர், படிப்படியாக உயர்ந்து 2019-ஆம் ஆண்டு நீதித்துறை ஆணையர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 2022-ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வுப் பெற்றார்.



