உலகக் கிண்ண காற்பந்து போட்டி: டிக்கெட் விலையை Fifa தலைவர் தற்காத்தார்

துபாய், டிச 30- அடுத்த ஆண்டு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெறும் உலகக் கிண்ண காற்பந்து போட்டிக்கான டிக்கெட் விலைகளை Fifa எனப்படும் உலக காற்பந்து சம்மேளனத்தின் தலைவர் கியானி இன்பான்டினோ ( Gianni Infantino ) தற்காத்துப் பேசியுள்ளார்.
அவற்றுக்கான அதிக தேவை மற்றும் உலகம் முழுவதும் இந்த விளையாட்டுக்கு கிடைக்கும் வருவாய் ஆகியவற்றை மேற்கோள் காட்யுள்ளார்.
டிக்கெட் விலைகள் அதிகமாக இருப்பதாக இந்த மாதம் ரசிகர் குழுக்கள் விமர்சித்திருந்தன. 2022ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்து போட்டியின்போது இருந்த டிக்கெட்டுகளை விட இப்போது பல மடங்கு அதிகமாக இருப்பதாக காற்பந்து ரசிகர்கள் சாடினர்.
தகுதி வாய்ந்த அணிகளின் ரசிகர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் வழங்க Fifa 60 அமெரிக்க டாலருக்கு டிக்கெட்டை அறிமுகப்படுத்தியது.
எங்களிடம் ஆறு அல்லது ஏழு மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையில் உள்ளன. 15 நாட்களில், எங்களுக்கு 150 மில்லியன் டிக்கெட் கோரிக்கைகள் வந்தன. ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் டிக்கெட்டுகள் தேவையென கோரிக்கைகள் வந்தன.
எனவே உலகக் கிண்ண காற்பந்து போட்டி எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை இது காட்டுகிறது என்று Infantino திங்களன்று துபாயில் நடந்த உலக விளையாட்டு உச்சநிலை மாநாட்டில் கூறினார்.
உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் 100 ஆண்டு கால வரலாற்றில் கடந்த இரண்டு வாரங்களில் 44 மில்லியன் டிக்கெட்டுகளை Fifa விற்பனை செய்துள்ளளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ரசிகர்கள் அதிக எண்ணிக்கையிலான டிக்கெட் கோரிக்கைகளை விடுத்துள்ளனர், அதைத் தொடர்ந்து ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தும் அதிகமான டிக்கெட்டுகளை கோரியதாக Fifa தலைவர் தெரிவித்தார்.



