Latestமலேசியா

உலகத் தலைவர்கள் மகாதீரைச் சந்திப்பதை அன்வார் தடுத்தாரா? அரசியல் செயலாளர் மறுப்பு

கோலாலம்பூர், பிப்ரவரி-20 – மலேசியாவுக்கு வந்த வெளிநாட்டுத் தலைவர்கள் சிலர் தம்மை சந்திப்பதை, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தடுத்ததாக துன் Dr மகாதீர் முஹமட் வைத்துள்ள குற்றச்சாட்டை, பிரதமரின் அரசியல் செயலாளர் மறுத்துள்ளார்.

அப்படி அன்வாரால் ‘தடுக்கப்பட்ட’ உலகத் தலைவர்கள் யார் என்பதை மகாதீர் அறிவிக்க வேண்டும்.

தவறினால், அனுதாபம் தேடும் முயற்சியில் மகாதீர் வெளியிடும் அவதூறாக அது கருதப்படுமென, Kamil Munim தெரிவித்தார்.

பொய் சொல்வது நல்லதல்ல; அது ஒரு பாவம் என தனது X தளத்தில் Kamil கூறினார்.

மலேசியா வந்த இரண்டு மூன்று வெளிநாட்டுத் தலைவர்களை, தம்மைச் சந்திக்க விடாமல் அன்வார் தடுத்ததாக, Apa Cerita எனும் போட்காஸ் பேட்டியின் போது, மகாதீர் குற்றம் சாட்டியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!