கோலாலம்பூர், டிசம்பர்-4, விமான நிலைய சேவைத் தரத்தில் KLIA உலகில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
355 விமான நிலையங்கள் அடங்கிய உலக அடைவுநிலை தர வரிசையில், KLIA-வுக்கு 5 முழு மதிப்பெண்கள் கிடைத்துள்ளன.
சேவைத் தரத்தில் ஆக மோசம் என்றால் 1 புள்ளியும், ஆகச் சிறந்தது என்றால் 5 புள்ளியும் வழங்கப்படுகிறது.
ஒட்டுமொத்த திருப்தியில் உலக சராசரி மதிப்பெண் 4.32-டாக உள்ள நிலையில், KLIA 5 புள்ளிகளைப் பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல பிரிவுகளில் KLIA 5 முழு மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறது.
சுங்க விவகாரத்தில் சராசரியாக 4.88 மதிப்பெண்களும், ஆசிய பசிஃபிக் வட்டாரத்திற்கான சராசரியில் 2.77 மதிப்பெண்களும், ஆண்டுக்கு 40 மில்லியன் பயணிகளைக் கையாளும் விமான நிலையங்கள் பிரிவில் 4.42 புள்ளிகளையும் KLIA பெற்றுள்ளது.
ஒட்டுமொத்த அனுபவத்திற்கான பிரிவிலும் உலக சராசரியான 4.19 மதிப்பெண்களைக் காட்டிலும், KLIA 5 முழு மதிப்பெண்களைப் பெற்றது.
இவ்வாண்டு ஜூலை 1 முதல் செப்டம்பர் 12 வரை நடத்தப்பட்ட அந்த ஆய்வில், 16 வயதுக்கும் மேற்பட்ட 352 பயணிகளிடம் கருத்துகள் கண்டறியப்பட்டன.