
சீனா, ஜனவரி 7 – உலகிலேயே நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையான Tianshan Shengli சுரங்கப்பாதையை சீனா கடந்த டிசம்பர் 26 ஆம் தேதியன்று பொதுமக்களுக்கு திறந்தது. இந்த சுரங்கப்பாதை சீனாவின் வடமேற்கில் உள்ள நகரத்தில் அமைந்துள்ளது.
22.13 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சுரங்கப்பாதை, சீனாவிலுள்ள Xinjiang மாநிலத்தின் வடக்கு–தெற்கு பகுதிகளுக்கிடையிலான பயண நேரத்தை பல மணி நேரங்களில் இருந்து வெறும் 20 நிமிடங்களாக குறைத்துள்ளது.
முன்னதாக, Tianshan மலைத்தொடரை கடந்து செல்ல வேண்டியதால், பயணம் ஆபத்தானதும் நீண்டதுமாக இருந்தது; குளிர்காலங்களில் சாலைகள் அடிக்கடி மூடப்பட்டன.
-42°C வரை வெப்பநிலை குறையும் கடுமையான சூழல் மற்றும் நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளிலும், சீன பொறியாளர்கள் வெறும் ஐந்து ஆண்டுகளில் இந்தத் திட்டத்தை நிறைவு செய்தனர்.
சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவான இந்த சுரங்கப்பாதை, நெடுஞ்சாலையை இணைத்து, சீனாவின் மேம்பட்ட கட்டமைப்பு திறனை வெளிப்படுத்தியுள்ளது.



